New York

Call Us : +1 (516) 589-0669

599- Madhava

- Madhava

by

Krishna kripa

on

October 16, 2026
Chenchuritti
மாதவா நீ என் மனதை அமைத்திடு
சத்தியமாய் நீயே நான் என்றுணரவே !
யாதவா நீ என்னில் நினைவாய் எழுவாய் !
நித்தியமாய் நீ மட்டும் என்னிலென்றுணரவே !!
என்னைவிட என்னை நீ அறிகின்றாய் கண்ணா
உன்னைவிட மேலொரு ஆனந்தம் உண்டோ ? !
என்றும் நான் தேடும் சத்குரு நீயே
பரமபிரகாசமே நடத்திடு என்னை !!
பூர்வ கர்மபலமே இந்த ஜென்மமும்
எத்தனையோ வேடங்கள் இன்னும் வரும் !
ஜென்மங்கள் ஒவ்வொன்றும் சுக்ருதாமிர்தமாகும்
அனுதினம் நீ தேரை நடத்திடுவாயெனில் !!