பூரண சந்திரோதய இரவின் குளிர்மையில் வண்ண ஒளி பரப்பிட நட்சத்திரங்கள் மலரவே பக்தி நிறைந்த ராதையாக மாறி நான் முக்தி தருவோனே, உன் அருகில் வந்தடைந்தேன்
மோகம் பொங்கும் உன் நீல விழிகளில் தாகம் ஊட்டிடும் கண் இமைகளின் திருநிழல் மௌன தாளத்தில் மெதுவாய் அழைக்கும்போது படகுபோல் மிதக்கிறது என் ஶ்ருங்காரம்
நீலத் தாமரை இதழ்போன்ற விரல்கள் சேலையாய் மேனியில் தழுவி வழியும்போது வெண்முல்லைக் கொடியாய் உடலெங்கும் படரவென் வெண்நிலாவும் நாணி தன் ஒளியைத் தாழ்த்தியது