காலடி மண்ணிலே உதித்தெழுந்தொரு
ஞானசூரியப் பிரபாவமே
சிவகுரு புதல்வனாய் ஆர்யாம்பையின்
புண்ணியமாய் பிறந்தவனே
காலடி மண்ணிலே உதித்தெழுந்தொரு
ஞானசூரியப் பிரபாவமே
சிவகுரு புதல்வனாய் ஆர்யாம்பையின்
புண்ணியமாய் பிறந்தவனே
புண்ணியமாய் பிறந்தவனே
அதர்மம் வாழுமிவ் உலகில் மீண்டும்
சங்கரன் பிறக்கட்டுமே
மனதினில் இருளினை மாய்த்திடும்
நித்தியப் பிரகாசமே
அதர்மம் வாழுமிவ் உலகில் மீண்டும்
சங்கரன் பிறக்கட்டுமே
மனதினில் இருளினை மாய்த்திடும்
நித்தியப் பிரகாசமே
நித்தியப் பிரகாசமே
பெற்றம்மையின் நோவினை அறிந்திடும் அன்புநிதியாம் மகனாய்
அன்று மாத்ருபஞ்சகம் சொல்லி உருகிய புண்ணிய வடிவமே
பெற்றம்மையின் நோவினை அறிந்திடும் அன்புநிதியாம் மகனாய்
அன்று மாத்ருபஞ்சகம் சொல்லி உருகிய புண்ணிய வடிவமே
தியாகத்தின் முத்திரைகள் தாளமாய் மலர்ந்திடும் வேளையில்
தரணியில் அன்பெனும் பெருவெள்ளமாய் நீ மாறுகின்றாய்
அத்வைதமெனும் அந்தச் சத்தியம்
அநீதியின் கோட்டைகள் உடைக்கின்றது
அனகமாம் ஞானத்தின் சங்கரர்கள் மீண்டும் பிறக்கட்டும்
சங்கரர்கள் மீண்டும் பிறக்கட்டும்